Monday, July 23, 2007

கிள்ளிவிட்டு...

என்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கடைக்கண் பார்வை வீசி
என் இதயத்தை உடையச் செய்கிறாய்
பின் ஒரு மெல்லிய புன்னகையால்
நீயே அதை ஒட்டவைகிறாய்!!!
இதுதான் குழந்தையை கிள்ளி
தொட்டிலையும் ஆட்டுவது என்பார்களோ???

-தனிமைரசிகன்.

மூன்றாம் பிறை

கடற்கரை மணலில் உன் மடியில்
சாய்ந்தபடி உன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்...
"என்ன பாத்துக்கிட்டே இருக்கீங்க" என நீ கேட்டதற்கு
"எனக்கு நிலவை ரசிப்பது பிடிக்குமென்றேன்"
நீ வெட்கப்பட்டுக்கொண்டே உன் முகத்தை
ஒரு கையால் கொஞ்சம் மறைத்துக்கொண்டாய்.
நான் மூன்றாம் பிறையையும் ரசிப்பவன் என்று தெரியாமல்...


-தனிமைரசிகன்

Friday, July 20, 2007

மரணம்

மரணத்திற்க்கும் மாலையிட
நான் தயார்...
நீ எனக்கு மாலையிடத் தயாரெனில்...

-தனிமைரசிகன்

ஆசைகள்

காலையில் விடிந்ததும்
என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே
நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம்
என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...
நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும்
உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...
நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும்
உன் விரல்கள்...
எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும்
என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும்
நம் இதழ்கள்...
அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும்
உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும்
உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும்
அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும்
உன் விழிகள்...
என் கலைப்பை போக்க நீ கொடுக்கும்
உன் இதழ் பட்ட தேனீர்...
சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும்
என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும்
இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான
உன் போர்வை...
இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல்
என் கழுத்தில் புதையும் உன் முகம்...
என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும்
நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத
உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...
என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும்
அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்
விடியும் காலை...
இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...

-தனிமைரசிகன்

காகிதப்பூ

உன் கூந்தல் சூடினால்
நிச்சயம் மனக்கும்
அந்தக்
காகிதப்பூவும்...
உன் மனதோடு சேர்ந்து மனக்கும்
என் காதலைப்போல...

-தனிமைரசிகன்

சீ போ

இரவெல்லாம் கண்விழித்து
நான் எத்தனை
கவிதைகள் எழுதினாலும்
அத்தனை கவிதைகளும்
தோற்றுப்போகின்றன
நீ சொல்லும்
"சீ போ"
எனும் வார்த்தைக்கு முன்னால்...

-தனிமைரசிகன்

மழை

உன் வீட்டில் உன்னை விட்டுவிட்டு
நான் சற்று தூரம் சென்றவுடன் என்னை அழைத்தாய்...
"என்ன?" என்று கேட்டதற்க்கு
"மழை தூறுது நனையாம பாத்துப் போங்க" என்றாய்!!!
பதிலுக்கு நான்
"உன் காதல் எனக்கு குடையாய் இருக்கையில் நான் எப்படியடி நனைவேன்"
என்றேன்!!!
சற்றும் யோசிக்காமல் மண்ணைத் தழுவும் மழைதுளி போல
ஓடி வந்து என்னை தழுவிக்கொண்டாய்...
அன்றுதான் முதல் முதலாய் இருவரும் ஒன்றாக நனைந்தோம்
மழையில் அல்ல
நம் காதலில் !!!

-தனிமைரசிகன்

காதல்

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
இரு தூக்கத்தில் ஒரு கனவு
ஒரு கனவில் இரு உயிர்கள்
இரு உயிர்களுக்கு ஒரு இதயம்
ஒரு இதயத்தில் இரு சுவாசங்கள்
இரு சுவாசங்களில் ஒரு துடிப்பு
ஒரு துடிப்புக்குள் இரு நினைவுகள்
இரு நினைவுகளில் ஒரு உறவு
ஒரு உறவில் இரு உணர்வுகள்
இரு உணர்வுகளில் ஒரு ஸ்பரிசம்
காதல்...

-தனிமைரசிகன்

உன் பிரிவினில்

இலையுதிற்காலம் இலைகளுக்கு மட்டுமல்ல
என் நினைவுகளுக்கும் தான்
நீ என்னை பிரியும் போதெல்லாம்...

-தனிமைரசிகன்.

உன் சுவடுகள்

என் வீட்டு தோட்டத்தில்
மலர்களை வண்ணத்துப்பூச்சிகள்
தீண்டுவதில்லை
அங்கே நீ விட்டுச்சென்ற உன் பாதச்சுவடுகள்
எஞ்சி இருப்பதனால்...

-தனிமைரசிகன்

கவிதை

நீ மழையில் நனைந்து கொண்டே
சினுங்கிய போதுதான்
நான் முதல் முறை உணர்ந்தேன்
கவிதையென்றால் என்னவென்று...

-தனிமைரசிகன்.

விழி திறவாமல்

ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்...
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்துவிடக்கூடாதென்று...

-தனிமைரசிகன்.

உன்னுள் நான்

என்னை பார்க்கவேண்டும் என்று
உனக்கு தோன்றும் போதெல்லாம்
கண்ணாடி முன் நின்று சற்று புன்னகை செய்
உன் உதட்டு வரி பள்ளங்களில் நான் காத்திருப்பேன்
உன் புன்னகையை எதிர்பார்த்துக்கொண்டு...

-தனிமைரசிகன்.

முடிவும் ஆரம்பமும்

ஒவ்வொரு முடிவும் மற்றொரு
ஆரம்பம் என்பார்கள்...
உண்மைதான் இதோ
உன் புன்னகையின் முடிவு
என் காதலின் ஆரம்பமாய்...

-தனிமைரசிகன்.

தாய்

உன் பார்வை என்னை தீண்டிய
நாள் முதல்
நான் தாயானேன்
என் இதயம் கருவரயாய்
உன் காதல் அதில் குழந்தையாய்...


-தனிமைரசிகன்.

நிழலும் நிஜமும்

நீ என்னை கடந்து சென்றபொது
உன்னை விட்டுப் பிரிந்தது உன் நிழல்...
என்னை விட்டு பிரிந்தது என் நிஜம்...
இதை காதலன்றி வேறென்னவென்று சொல்லூவது...?

-தனிமைரசிகன்.

சந்திப்பு

என்னை தொலைத்த நானும்
அவளை தொலைத்த அவளும்
சந்தித்துக்கொண்டோம்
"காதல்" எனும் இடத்தில்.
பின்புதான் உணர்ந்தோம்
நான் அவளிடமும்
அவள் என்னிடமும்
தொலைந்து போன விஷயத்தை...

-தனிமைரசிகன்.