Friday, July 20, 2007

ஆசைகள்

காலையில் விடிந்ததும்
என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே
நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம்
என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...
நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும்
உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...
நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும்
உன் விரல்கள்...
எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும்
என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும்
நம் இதழ்கள்...
அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும்
உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும்
உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும்
அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும்
உன் விழிகள்...
என் கலைப்பை போக்க நீ கொடுக்கும்
உன் இதழ் பட்ட தேனீர்...
சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும்
என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும்
இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான
உன் போர்வை...
இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல்
என் கழுத்தில் புதையும் உன் முகம்...
என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும்
நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத
உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...
என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும்
அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்
விடியும் காலை...
இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...

-தனிமைரசிகன்

No comments: