Tuesday, November 19, 2013
சிறு மீனாய் !
உன் நினைவுகளில் ஒற்றை தூண்டிலிட்டாலும் சிக்கி விடுகிறேன் சிறு மீனாய் !
- தனிமைரசிகன்.
Posted by நான் at 10:44 PM 0 comments
இதயக்கண்ணாடி !
அதைவிட அதிகமாய் உன் பிம்பம் விழும் இடம் என் இதயக்கண்ணாடி என்று !
Posted by நான் at 10:31 PM 0 comments
Thursday, March 5, 2009
சுமை...
உன் நினைவுகளை
என் இமைகள் சுமக்க முற்பட்டதால்
என் நினைவுகள்
இன்று உன் உறக்கத்தை சுமந்து நிற்கின்றன
- தனிமைரசிகன்.
Posted by நான் at 12:40 AM 0 comments
Monday, February 23, 2009
மழை
அவள் மழையில் நனைந்து வந்தப்பின்
அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...
என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 1:57 AM 0 comments
Friday, June 20, 2008
புலம்பல்
பதவி இழந்த அரசியல்வாதியாய்
புலம்பிக்கொண்டிருக்கிறது உன் தலையனை...
உன்னுள் நான் வந்ததினால்...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 2:35 AM 0 comments
Monday, April 7, 2008
எனது தேசத்தாயின் அவலம்...
இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்,
இரண்டு குழந்தைகளும் அழும் போது
ஒரு குழந்தைக்கு ஒரு மார்பகம் என்று தந்திருப்பாள்...
அதே மூன்றாவது குழந்தை பிறந்து
அதுவும் பசியால் அழுதால்,
அவள் யோசிப்பாளா இன்னொரு மார்பகம் வேண்டும் என்று???
இதோ என் இந்திய தாய்க்கு பிரிவினை பிரச்சனை...
அவளுக்கு 26 குழந்தைகள்...
குழந்தைக்கொரு ஆறு என்றிருந்திருந்தால்...
அவளுக்கு சந்தோஷம் தான்...
இன்று தமிழ் நாடென்னும் குழந்தையும்...
கர்நாடகம் எனும் குழந்தையும் இப்படி
அவளிடம் சுரக்கும் பாலுக்காக
தங்கள் ரத்தத்தை வழிய விட்டு கொண்டிருக்க மாட்டார்கள்...
மூடர்களே தாயின் மார்பில் சுரக்கும் பால்
எந்த குழந்தைக்கு சொந்தம் எனும் பிரச்சனை வந்தால்
தாய்க்கு இழுக்கு இல்லையா???
இந்தியத் தாயே எங்களை மன்னிபாயாக...
-தனிமைரசிகன்.
Posted by நான் at 11:19 AM 3 comments